December 16, 2020
தண்டோரா குழு
காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி இந்து மக்கள் புரட்சி படையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
காந்திபுரம் சக்தி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்து மக்கள் புரட்சி படையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை காந்திபுரம் சத்தி ரோடு மேம்பாலத்திற்கு மறைந்த தேசத்தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரை வைக்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.