• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரம் பேருந்து நிலையம் முழுவதும் ‘வாட்டர் வாஸ்’ மக்கள் வரவேற்பு

April 30, 2022 தண்டோரா குழு

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் கொரோனா 4 வது அலை துவங்கியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பேருந்து நிலையங்களான காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் போன்றவற்றில் பயணிகளுக்கு சுகாதாரத்தை வழங்கும் வகையில், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் ஆலோசனையின் பேரில், மாஸ் கிளீனிங் நடைபெற்றது.

மாஸ் கிளீனிங் போது, ஜெட்டிங் என்ற நவீன எந்திரத்தின் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து பேருந்து நிலைய கட்டிடங்கள், சுவர்கள், நாற்காளிகள் மற்றும் பேருந்து நிலைய வளாகங்கள் கழுவப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது. இந்த மாஸ் கிளீனிங்கில் 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம், உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்துநிலையங்கள் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டன.

பேருந்து நிலையத்தில் மாஸ் கிளீனிங் செய்யப்படுவது, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த மாஸ் கிளீனிங்கை மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் மாரிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கவுன்சிலர்கள் வித்யா ராமநாதன், மண்டல சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க