தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது.
தொடர்ந்து அந்த பேருந்து கிராஸ்கட் ரோடுக்கு முன்புறம் செல்லும்போது, நஞ்சப்பசாலையில் இருந்து காந்திபுரம் சத்தி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது.
தனியார் பேருந்து அதி வேகமாக வந்து மோதியதில் அரசு பேருந்து காந்திபுரத்தில் உள்ள வணிக வளாகம் மீது இடித்து நின்றது.இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொள்ளுகின்றனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு