May 23, 2018
தண்டோரா குழு
பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, ஊனம் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள்.
சைகை மொழி மட்டுமே தனக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாக கடந்து வரும் இந்த மாணவிகள் மேலும் தற்போது ஒரு படி சாதனையை உயர்த்தி காண்பித்து உள்ளனர்.
கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும்,கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் மற்ற பாடங்களை காட்டிலும்,கணித பாடத்தை புரிந்து கொள்ள பல கடினங்களை சந்தித்து வந்தாலும்,கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும் இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர்.பல காரணங்களால் சில நாட்கள் வீட்டில் முடக்கி வைத்து இருந்த தனது பிள்ளையை இதுபோன்ற ஒரு பள்ளியில் படிக்க வைத்தது தற்போது பெருமை அளிப்பதாகவும் இவரை போன்று உள்ள குழந்தைகளை அனைத்து பெற்றோர்களின் கல்வி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்.
சாதாரண மாணவர்களை விட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன்,பல்வேறு இடர் பாடுகளுடன் பாடங்களை கற்பித்து வருவதாகவும்,இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்கு பெருமையை அளிப்பதாக கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் ஒவ்வொருவரும் பல இன்னல்களுக்கு இடையே இந்த பொதுத் தேர்வை எழுதுவதாகவும்,இருப்பினும் இந்த மாணவர்களுக்காக அரசு தேர்வு எழுதுவதில் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.தற்போது இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், மேல் படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்.