October 2, 2022
தண்டோரா குழு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியினர் வடவள்ளி காதி இந்தியா கடையில் கதர் பொருட்களை வாங்கினர். இதில் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் வசந்த சேனன் மாவட்ட பொதுச் செயலாளர் விஜய் சேகர் வடவள்ளி மண்டல் தலைவர் திரு பாலதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.