• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காட்டை பாதுகாக்கும் வேட்டைத் தடுப்புகாவலர்களின் குரலை கேட்குமா தமிழக அரசு ?

October 26, 2018 பி.எம். முஹம்மது ஆஷிக்

வனத்துறையின் கடை நிலை ஊழியர்களுக்கு பெயர் வேட்டை தடுப்புக் காவலர்கள். வனத்துறையில் வனத்துறை அதிகாரி, வன காப்பாளர்கள், வனக்காவலர், வன அலுவலர்கள் எனஇருந்தாலும்காடுகள்குறித்தஅனைத்து தகவல்களையும் விரல்நுனியில்வைத்திருப்பவர்கள் என்னவோ வேட்டைதடுப்புக்காவலர்கள்தான். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருக்கிற காடுகளில் வேட்டைதடுப்புக்காவலர்கள்தங்களின்பணிகளைசெய்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுகென்று ஒதுக்கப்பட்ட காடுகளுக்கு சென்று புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் வாழும் வனத்தை பாதுகாப்பது, வனப்பகுதிகளுக்கள் உள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி கண்காணிப்பது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வரும்போது வனத்துறையினரோடு இணைந்து அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்புவது, வனப்பகுதிக்குள் யாராவது கஞ்சா போன்ற போதைபயிர்களை பயிரிடும்போது அவற்றை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுமட்டுமின்றி யானைகள் இறந்தால் அவற்றை பிரேத பரிசோதனை செய்யும்போது முழு உதவியாளராக வேட்டைதடுப்பு காவலர்களே இருக்கின்றனர்.வனப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் வனக்கொள்ளையர்களுக்கிடையே தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வரும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ஆர்ஆர்டி பிரிவில் பணியாற்றுவோருக்கு ரூ.6,750 சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கோவை சின்னதடாகம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டும் பணியில் ஆர்ஆர்டி (துரித செயலாக்க குழு) பிரிவு ஈடுபட்டிருந்தனர்.இந்த சம்பவத்தில் ஆர்ஆர்டி பிரிவில் பணியாற்றும் வெங்கடேஷ் (28) யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.தற்போது வெங்கடேஷ் குடும்பத்திற்கும் சீருடை வன பணியாளர்களுக்கு வழங்குவது போல் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வேட்டை தடுப்பு காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் கூறுகையில்,

வனத்துறையில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் வேட்டை தடுப்பு காவலர்களும் ஆர்ஆர்டி பணியாளர்களும் தான். தங்கள் உயிரையும் பணயம் வைத்து உயரதிகாரிகளின் ஆணைக்கிணங்க இவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுதில்லை. அரசு இதனை கவனத்தில் கொண்டு இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வாய்மொழியாக சொல்லாமல் அரசு ஆணையாக வெளியிடவேண்டும்.அதைபோல், பொதுவாக யானை மிதித்து பொதுமக்கள் யாரவது உயிரிழந்தால் அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கபட்டுவருகிறது. அதேசமயம் சீருடை வன பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.ஆனால்,வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஆர்ஆர்டி பணியாளர்கள் வன விலங்கு தாக்கி உயிரிழந்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது போல் 4 லட்சம் ரூபாய் தான் இழப்பீடு அளிக்கப்படுகிறது. களத்தில் இறங்கி பணியாற்றும் இவர்களுக்கும் சீருடை வன பணியாளர்களுக்குவழங்கபடுவது போல் 10 லட்சம் ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும் என்றார்.

வன வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சரவணக்குமார் கூறுகையில்,

வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லை என்றால் காடுகள் பாதுக்காகப்படுவது கடினம் தான். காட்டை பாதுகாப்பது நாங்கள் தான். அதைபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள அனைத்து முகாம்களிலும் நாங்கள் தான் தங்கி இருக்கின்றோம்.நக்சலைட்களோ, தீவிரவாதிகளோ வரமுடியாமல் இருப்பதற்கு நாங்கள் அங்கு இருப்பதால் தான் காரணம். காட்டிற்குள் செல்லும் எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்கலாம். எந்த விலங்கு எப்படி வேண்டுமாலும் தாக்கலாம். இப்படி இருக்கும் போது வனப்பணியாளர்களுக்கு கொடுப்பது போல் எங்களுக்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காதது வேதனை தான். இன்று இவர்களுக்கு பெற்று தந்தால் தான் நாளை எல்லோருக்கும் வந்து சேரும். தமிழகத்தில் 908 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இது போன்று புலிகள் காப்பகத்தில் புலிகள் திட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு அன்றைய சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு முதுநிலை பட்டியல் தயாரித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசானை வெளியிடப்பட்டது. அப்போது, 137 பேர் பணி நிரந்தரம் பெற்று தற்போது அவர்கள் வனக்காவலர்களாக உள்ளனர். ஆனால், கடந்த 8 வருடங்களாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரமோ, பதவி உயர்வோ ஏதும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்காக நாங்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் சங்கம் சார்பாக உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வரை சந்தித்து கோரிக்கை வைத்து வைத்து வருகிறோம். இந்த 908 பேரில் 380க்கும் மேற்பட்டோர் பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவர்கள் இருக்கிறார்கள்.

எங்களது கோரிக்கை இது தான், தமிழக அரசால் அறிவிக்கபட்ட 908 வேட்டை தடுப்பு காவலர்களையும் மாநில முதுநிலை பட்டியல் தயாரித்து தமிழ்நாடு வனத்துறையில் கடைநிலை பணியான வனக்காவலர் பணி வழங்க வேண்டும். தற்போது தமிழகத்தில் 80 சதவீதத்திற்கும் வனக்காவலர் பணி மேல் காலியிடமாக தான் உள்ளது. அந்த பணியிடத்தை தான் நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

மழை, வெயில், குளிர் என எல்லா காலநிலைகளிலும் காடுகளுக்குள் ரோந்து செல்கிறார்கள். அட்டைகளின் தொல்லை விலங்குகளின் அச்சுறுத்தல் என எதைப் பற்றிய கவலைகளும் இல்லாமல் பணி செய்கிறவர்களை வனத்துறை எந்த நேரத்திலும் முன்னிறுத்தியதே இல்லை. காரணம் வேட்டை தடுப்புக்காவலர்கள் இப்போதுவரை ஒப்பந்ததொழிலாளர்களாகத்தான் பணிபுரிந்துவருகிறார்கள். இருக்கிற அனைத்து இடர்பாடுகளையும் கடந்துதான் வேட்டைத்தடுப்புகாவலர்கள் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் பணிநிரந்தரமும் பாதுகாப்பும்தான். வேட்டைத்தடுப்புகாவலர்களின் குரல் அரசுக்கு கேட்குமா?

மேலும் படிக்க