February 28, 2018
தண்டோரா குழு
காஞ்சிபுரம் சங்கர மட மூத்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி (83) உடல்நலக்குறைவால் இன்று(பிப் 28)காலமானார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத்திணறலால் சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனிற்றி இன்று காலமானார்.
1994 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக பதவியேற்ற ஜெயேந்திரர் புரோகித் தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.