March 1, 2018
தண்டோரா குழு
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மட மூத்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி (83) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் இன்று தொடங்கியது.காலை 11 மணிவரை வேத மந்திரங்கள் ஓத யாகங்கள் நடைபெற்று இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் சங்கரமடத்திற்குள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.