May 18, 2018
தண்டோரா குழு
ஜனார்த்தனரெட்டி பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏ பாசனகவுடா தத்தாவிடம் பணம், அமைச்சர் பதவி தருவதாக ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசுவது போல் உள்ள ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியீட்டுள்ளது.
இந்நிலையில், பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது. காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.