March 3, 2018
தண்டோரா குழு
இத்தாலிய காங்கிரஸ்,சீன கம்யூனிஸ்ட்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 18ம் தேதியும், நாகலாந்து, மேகாலயாவில் 27ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது.மேகாலயாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் 24 தொகுதியை கைப்பற்றியுள்ளது.
நாகலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜக 32 இடங்களை பிடித்துள்ளது. இங்கும் பா.ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியான நிலையில், திரிபுராவிலும், நாகலாந்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திரிபுரா, நாகலாந்தில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில்,இத்தாலிய காங்கிரஸ்,சீன கம்யூனிஸ்ட்களுக்குஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார்.