• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் – வானதி ஸ்ரீனிவாசன்

November 18, 2019 தண்டோரா குழு

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ரபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்ன ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பா.ஜ.க. சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை, தேர்தல் நேரத்தில் தவறாக கூறிய ராகுல் காந்தி அப்போதே அருண் ஜெட்லி பதில் கூறிவிட்டார். உச்சநீதிமன்றமும் ராகுல் காந்தியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காமல் தொடர்ந்து இது போல் பேசி வந்தால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க