• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடு

May 19, 2018 தண்டோரா குழு

காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்குஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி,எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது.இது குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது,இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக பாரதீய ஜனதா தலைவர்கள் பேசியதற்கான ஆதாரம் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும்,காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் ஜனார்த்தனரெட்டி,எடியூரப்பா,ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது.அவர்கள் என்ன சலுகைகள் வழங்குவதாக கூறினார்கள்,எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அந்த ஆடியோவில் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ இன்று வெளியானது.இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க