• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸிற்கு 22 மஜதவுக்கு 12 முடிவுக்கு வந்த இலாகா இழுபறி

June 1, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் இலாகா பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.முதலமைச்சராக குமாரசாமியும்,துணை முதலமைச்சராக பரமேஷ்வர ராவும் கடந்த வாரம் பதவியேற்றனர்.எனினும்,காங்கிரஸ்,மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியிடையே இலாக்கா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நீடித்ததால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தீர்க்கும் விதமாக இன்று இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

இதன்படி காங்கிரசுக்கு,உள்துறை,நீர்பாசனம்,சுகாதாரம்,பெங்களூரு நகர வளர்ச்சி,வருவாய்த்துறை ஊரக நகர்ப்புற வளர்ச்சி,வீட்டுவசதி,விவசாயம் மற்றும் பெண்கள்மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.அதைபோல்,மதசார்பற்ற ஜனதா தளத்தின் வசம் நிதி,பொதுப்பணி,மின்சாரம்,கூட்டுறவு,கல்வி,சுற்றுலா,போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது என முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்து வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

மேலும்,கூட்டணி அரசில் பிரச்னைகளை தீர்க்க கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும்,இதன் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் ஒருங்கிணைப்பாளராக மஜத கட்சியின் டானீஸ் அலி செயல்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க