• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காகிதத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்- கோவையில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு

July 25, 2024 தண்டோரா குழு

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள், வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் இந்திய கூழ் மற்றும் காகிதம் டெக்னிக்கல் சங்கம் (IPPTA) சார்பில் ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் சர்வதேச அளவில் கருத்தரங்கு,‘‘கூழ் மற்றும் காகித தொழில்நிறுவனங்களில் எலக்ட்ரிக்கல்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோமேஷன் & டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் கோவை நவஇந்தியா ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடக்கிறது.

இக்கருத்தரங்கு, 26,27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.கருத்தரங்கில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள்,இயந்திரங்கள் சப்ளையர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்,பங்கேற்று ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு மாற்றாக காகித துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் போன்ற தலைப்புகளில்,ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

கருத்தரங்கில் உலகம் முழுவதிலுமிருந்து காகித தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள்,விஞ்ஞானிகள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய 425 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள்.

கோவை ரேடிசன் ப்ளூ ஹோட்டலில், ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை, டாக்டர் சந்தீப் சக்சேனா, ஐஏஎஸ், CMD/கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் துவக்கி வைக்கிறார்.

டாடா டெக்னாலஜிஸ், பெங்களூரு, குளோபல் பிராக்டீஸ் ஹெட்- –டிஜிட்டல், கௌதமன் ஸ்வர்ணம், உரையாற்றுகிறார்கள்.

இது தொடர்பான தகவல்களை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் ஐபிபிடிஏ தலைவர் பவன் கஹத்தான், துணைத் தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் கோயல், கமிட்டி சேர்மன் முரளி,துணை சேர்மன் நற்குணம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க