• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் வண்ணம் பூசும் பணி தீவிரம்

March 12, 2022 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்தது. இந்த மேம்பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 10 நாட்களுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் படிக்க