• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

February 10, 2020

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கோவை சரவணம்பட்டி பிபிஜி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளின் துவக்க விழா கோவை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் இருந்து 18 கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டன.இதில், 100மீ, 400மீ, தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் இசைப் போட்டி ஆகிய கலை இலக்கிய போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு அவர்கள் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பாண்டியன் கலந்து கொண்டார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை

பிபிஜி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் திரு. மனோகரன் மற்றும் இதர பேராசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வின் இரண்டாவது நாளன்று பிபிஜி கல்வியியல் கல்லூரி கலையரங்கில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க