• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

October 8, 2021 தண்டோரா குழு

கோவையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை கணபதியை சேர்ந்த ஒருவரின் 20 வயது மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மாணவி கல்லூரிக்கு செல்லும்போது வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவர் அந்த வாலிபரை எச்சரித்துள்ளார்.

அதன்பின்னரும் அந்த வாலிபர் விடாமல் மாணவியை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று மாணவி கணபதி ஜானகிநகரில் உள்ள பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மாணவியின் பின்னால் வந்து அவரை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரின் பெற்றோர் மீண்டும் வாலிபரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கணபதி மணியக்காரம்பாளையம் ரோடு கிருஷ்ணாநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(37) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க