• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் சரணடைந்த இருவருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

January 18, 2019 தண்டோரா குழு

கோவையில் கல்யான் ஜுவல்லர்ஸ் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக சென்னையில் சரணடைந்த இருவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி தமிழக-கேரள எல்லையான கோவை க.க.சாவடி அருகே பட்டப்பகலில் 8 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கோவைக்கு காரில் கொண்டு வரப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான ரூ.1கோடி மதிப்பிலான 3,107 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய் சமா, மகன் சலீம் ஆகிய இருவரை 17ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருமலையில் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய இருவர் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும், கோவை அழைத்து வந்த க.க.சாவடி காவல்துறையினர் கோவை 7வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தினர். இருவரையும் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி க.க.சாவடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 24ஆம் தேதி வரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி அளித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஐந்து பேரை இன்று இரவுக்குள் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க