• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலை போராளியாக இருப்பது சுலபம், ஆனால் கள போராளியாக இருப்பது சுலபமல்ல – சத்யராஜ்

December 28, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி விருது பெற்ற விவசாய மூதாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்று நெகிழ்ச்சியூட்டினார்.

ஆற்றல் என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஆசிரியர்,ஆட்டோ ஓட்டுநர், விவசாயி,துப்புறவு பணியாளர், செவிலியர், வீட்டு வேலை செய்பவர் என 74 தொழில்களின் அடிப்படையில் விருதுகளை வழங்கினர்.

முன்னதாக 103 வயதில் விவசாய பணி மேற்கொண்டு வரும் கோவை மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு விருதினை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே அவரது காலை தொட்டு வணங்கி நெகிழ்ச்சியூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு புதிய தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார் முதலமைச்சர் என்றும் கோவையில் பத்து தொகுதிகளில் எதிர்கட்சிகள் வென்றாலும் 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதியாக எண்ணி திட்டங்களை கொடுத்து வருகிறார் என்றும் பெருமிதம் கொண்டார்.

இதை தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ்,

தமிழகத்தில் சரியான துறைக்கு சரியான அமைச்சர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர் என்றார்.மேலும் கலை போராளியாக இருப்பது சுலபம், ஆனால் கள போராளியாக இருப்பது சுலபமல்ல என்ற அவர்,அமைச்சர் செந்தில் பாலாஜி களப்போராளியாக 25 ஆண்டுகளாக தொடர் வெற்றிகளை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும் படிக்க