• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முதல் கட்டத்தில் பதிவு செய்யாதோருக்கு சிறப்பு முகாம்

July 31, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது இரண்டு கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் வரும் 4ம் தேதி முடிய நடைபெற்று வருகிறது.இதில் பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.

சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வரும் 3 மற்றும் 4ம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை இந்த தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்திடுமாறும், விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்திடுமாறும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க