December 25, 2020
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த இரு சிறுமிகள் செய்த சாதனை நிகழ்வில் கலாம் புக் ரெக்கார்டில் இடம் பிடித்த நிலையில் சாதனை சிறுமிகளை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் கீதா.தட்டச்சில் ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக நான்கு நொடிகளில் அடித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஏசியன்,கலாம் புக் ஆப் ரெக்கார்டுகளில் இடம் பிடித்து சாதனை செய்தவர்.இந்நிலையில் இவரது மகளான மூன்று வயதான சன்சிதா ஸ்ரீ பெரிய பலூனை 15 நொடிகளில் இடை விடாமல் ஊதி சாதனை புரிந்துள்ளார்.இந்த சிறுமியின் சாதனையை பாராட்டி கலாம் புக் ஆப் ரெக்கார்ட் இவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இவர் 36 பகுதிகள் கொண்ட PUZZLE விளையாட்டை மூன்று நிமிடங்களில் முடித்தும் சாதனை புரிந்துள்ளார்.அதே போல இவரது உறவினரான தீக்ஷிதா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது வீட்டின் நான்கு அடி உயரமுள்ள ஜன்னலின் மீது ஏறி தொடர்ந்து ஒரு மணி நேரம் குதித்து சாதனை படைத்துள்ளார். அதே போல இடைவிடாமல் சைக்கிளிங் செய்தும் சாதனை புரிந்துள்ளார்.இந்த இரு சிறுமிகளின் சாதனைகளை பாராட்டி கலாம் புக் ஆப் ரெக்கார்ட் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனனை கீதா மற்றும் சிறுமிகள் சன்சிதா ,மற்றும் தீக்ஷிதா ஆகியோர் சந்தித்தனர். இவர்களது சாதனையை பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் சாதனை புரிந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உக்கடம் பகுதி செயலாளர் கணேஷ்,81 பி வார்டு செயலாளர் மயில்சாமி மற்றும் பாலாமணி ஆகியோர் உடனிருந்தனர்.