March 31, 2021
தண்டோரா குழு
ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை.கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான்.”கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” ஒற்றுமையால் முறியடிப்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்