• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கலசா பைன் ஜூவல்ஸ் நிறுவனம் சார்பில் தனித்துவமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை

January 20, 2021 தண்டோரா குழு

கோவையில் கலசா பைன் ஜூவல்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு வடிவமைத்த தனித்துவமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை கோயம்புத்தூர், ரெஸிடென்ஸி டவர் ஓட்டலில் இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு (ஜனவரி 20, 21 மற்றும் 22 ம் தேதிகளில்) நடக்கிறது.

அபர்ணா சுங்குவின் மேற்பார்வையில் தேர்வான தனித்துவமிக்க கைவினை தங்க நகை கண்காட்சி கலசா நுண் நகை காட்சி நடக்கிறது. இந்தியாவின் மாபெரும் நகை சேகரிப்பாக இந்த கண்காட்சி இடம் பெறுகிறது. இதில் சம்பா பப்ளிஷிங் கம்பெனி அன்ட் பார்ம், இயக்குனர், தேவி கற்பகம் மாருதி, மோகன் பிரீடிங் பார்ம், திருமதி கலை செல்வி மோகன், சமூக ஆர்வலர் மற்றும் மாடல், கவிதா ரமேஷ், எம்.டி.ஏ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இயக்குனர், ஷியாமளி ஜாய், ஷிவானி டால்மியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்கள்.

இது குறித்து பிரபல நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு கூறியதாவது :

கலசா பைன் ஜூவல்ஸ், பழங்காலத்து நகை வடிவமைப்புகளை, பழமையான சிலைகள், கலை நயமிக்க ஓவியங்களிலிருந்து சேகரித்து, அவற்றை கைவினைப்படுத்தி கோவையில் ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் காட்சிப்படுத்துகிறது. இதில், அனைத்து வகையான பிரமிக்க வைக்கும் தங்கம், பாரம்பரியமிக்க நகைகள், சிறப்புத்தன்மை வாய்ந்த அரச பரம்பரை நகை வகைகள், அரிய வகை நகை வடிவமைப்புகள் இடம் பெறுகின்றன. கலை நயமிக்க வேலைபாடுகளையுடைய, விருது பெற்ற வடிவமைப்புகளுடன் நாட்டின் சிறப்பான நகை கண்காட்சியை கலசா நடத்துகிறது.

கலசா, கோவில் மற்றும் பாரம்பரிய ஜூவல்லரி கலக்சன்களுக்கு பெயர் பெற்றது. மிகச்சிறந்த கோவில் நகைகள் என்ற இந்திய நகைகளுக்கான விருது மற்றும் பாரம்பரிய மணப்பெண் நகைகள் என்ற டைம்ஸ் ரீடெய்ல் விருதுகளை பெற்றுள்ளது.
இந்தியாவின் மாபெரும் ஜூவல்லரி சேகரிப்பு என்ற புதிய கருத்துடன் நடத்தும் இந்த கண்காட்சியில், பல புதுமையான நகைகள் கோவை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்திய வடிவமைப்பு கலையின் ஆணி வேராக திகழும் புதுமை வடிவமைப்பு நகைகள், ஜாடு நகைகள் இடம் பெறுகின்றன. கோவில் நகைககள், அலங்கார அழகிய வடிவமைப்புக் கொண்ட தினம் பயன்படுத்தும் நகைகள், விழாக்கால நகைகள் போன்றவை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் அவசியமானவை. இந்திய மக்களின் தேவையை அறிந்து, அவற்றை மனதில் கொண்டு, பழமையான, பாரம்பரியமிக்க வடிவமைப்பு கொண்ட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தி கிரேட் இன்டியன் ஜூவல்லரி கண்காட்சியை துவக்கி வைத்து கலசா வின் அபிசேக் சந்தா பேசுகையில்,

கண்காட்சியை காண்போர் மனதில் பரவசமூட்டுவதோடு, அணிவோருக்கு தனி கம்பீரமான தோற்றத்தை தருவதாக இன்று துவங்கும் காண்காட்சி அமையும். நம் நாட்டின் வளமையான கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும், தொன்மையை எடுத்துக் கூறும் சேகரிப்பாகவும் கலசா அமைந்துள்ளது, என்றார்.

மேலும் படிக்க