• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கற்பகம் கல்லூரியில் ‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ’

September 2, 2022 தண்டோரா குழு

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில்‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கமானது நடைபெற்றது.

அக்கருத்தரங்கத்தில், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப.தமிழரசி வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் முனைவர் ப.வேங்கடாசலபதி தலைமையேற்றார். கோவை மாவட்ட காவல், மது விலக்குப்பிரிவின் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் மாணவர்களுக்கு போதைப் பொருள்களின் தீமைகளை எடுத்துரைத்தார்.

மேலும், சாதிக்க வேண்டிய இளைஞர்கள், போதைப்பொருள் பயன்பாட்டினால் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலத்தை விளக்கினார். பெற்றோரின் அன்பையும், ஆசிரியர்களின் அறிவுரையையும் மறந்து சில இளைஞர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றனர். அதனால் அவர்கள் சுயநினைவை இழந்து, மனநல பாதிப்பு முதலான சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

அறியாமையால் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தொலைகிறது; மாணவர்கள், இளைஞர்கள் என்ற பேதமின்றி போதைப்பொருள் பயன்படுத்துவோர் எவராயினும், சட்டம் அவர்களைத் தண்டிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு என்ற வகையில் இளைஞர்களின் மீது பதியப்படுகிற வழக்குகள், அவர்களது ஆயுள்வரையில் தொடர்கிற அவலத்தை உணரவேண்டும்; அதனால் போதைக்கு அடிமையாகி மாணவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதிலிருந்து விழிப்புணர்வு தேவை என்றார்.

கருத்தரங்கத்தின் நிறைவாக கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ.பாலாஜி நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க