• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கறிவேப்பிலை வெங்காயத்துடன் செல்பி எடுத்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

February 22, 2021 தண்டோரா குழு

கறிவேப்பிலை மற்றும் வெங்காய விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மீம்ஸிகள் பகிரப்பட்டு வருகிறது.

கறிவேப்பிலை தற்போது ஒரு அதிசயமான அத்தியாவசிய பொருளாக பார்க்கப்படுகிறது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்துடன் செல்பி எடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலை பார்க் வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை மாலையாக அணிவித்து அதன் விலையுயர்வை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கறிவேப்பிலை கடைகளில் மற்றும் சாலையோர காய்கறிகளில் மிகவும் விலை குறைவில் கிடைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது மிகவும் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்த அவர்கள் விலையுயர்ந்த அத்தியாவசிய பொருளாக மாறிய கறிவெப்பிலை மற்றும் வெங்காயத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

இதனை சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க