• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்ப்பபை வாய் புற்று நோயை ஆரம்பகாலத்திலே கண்டறிய நவீன பரிசோதனைகள் வந்துள்ளது – ஆஷா ராவ்

January 4, 2021 தண்டோரா குழு

கர்ப்பபை வாய் புற்று நோயை ஆரம்பகாலத்திலே கண்டறிய தற்போது பல்வேறு விதமான நவீன பரிசோதனைகள் வந்துள்ளதாகவும், பெண்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவை ராவ் மருத்துவமனையின் இயக்குனர் ஆஷா ராவ் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் – தடுப்பு மற்றும் புற்றுநோயியல் சிகிச்சை மைய துவக்க விழா நடைபெற்றது.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் 3201 மாவட்ட ஆளுநர் ஜோஸ் சாக்கோலா,மற்றும் ஆன்காலஜி கமிட்டியின் தலைவரான டாக்டர் பிரியா கணேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் ராவ் மருத்துவமனை மற்றும் கேர் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆஷா ராவ் கூறுகையில்,

“இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் இந்தத் துறையைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்து கொண்டிருப்பதாக கூறிய அவர்,கர்ப்பபை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை தொடரந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் குறைவான கட்டணத்தில் இங்கு சிகிச்சை வழங்க உள்ளதாகவும், இதன் மூலம் சரியான சுகாதார சேவையை அணுக முடியாதவர்களுக்கு. “புற்றுநோய்க்கான பரிசோதனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் எனவும் இதனால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளை தடுக்க இயலும் என அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆப் அக்ருதியின் தலைவர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில்,

“கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்,ராவ் மருத்துவமனையுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். விழாவில் கிளப் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க