• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை

July 4, 2025 தண்டோரா குழு

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) தலைமையிலான நாடு தழுவிய பொது சுகாதார முன்முயற்சியின் ஒரு பகுதியாக, “கான்கெர் ஹெட்ச்.பி.வி (HPV) & கேன்சர் மாநாடு 2025” கோயம்புத்தூரில் தொடங்கியது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஹெட்ச்.பி.வி (HPV) தொடர்பான நோய்கள், குறிப்பாக கர்பப்பை வாய்ப் புற்றுநோய், நாட்டில் பெண்கள் மத்தியில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாக உள்ளது. ஹெட்ச்.பி.வி (HPV) மற்றும் புற்றுநோயின், ICO/IARC தகவல் மையத்தின் 2023க்கான அறிக்கைபடி, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1.23 லட்சத்திற்கும் அதிகமான புதிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வழக்குகளையும் 77,000க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்கிறது. கூடுதலாக, இந்தியாவில் சுமார் 90% ஆசனவாய் புற்றுநோய்களும் 63% ஆண்குறி புற்றுநோய்களும் ஹெட்ச்.பி.வி (HPV) காரணமாக ஏற்படுகின்றன.

கோயம்புத்தூரில் நடந்த நிகழ்வில், மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று கூடி ஹெட்ச்.பி.வி (HPV)-யின் பொது சுகாதாரத் தாக்கங்கள் குறித்து ஆழமாக விவாதித்தனர். குழுவில் பின் வருவோர் பங்கேற்றனர்:

டாக்டர் டி.வி. சித்ரா பட் – பேராசிரியர் – PSG IMS&R பிரிவுத் தலைவர். IMA பயிற்சிக்கான ஹெட்ச்.பி.வி (HPV) ஆசிரியர். உறுப்பினர், FOGSI & IAP HPV தடுப்பசி திட்டம் 2023–2024 இல் முதன்மை பயிற்சியாளர்.

டாக்டர் கே. ஆரத்தி – எம்.டி & முன்னணி ஆலோசகர் – மனு மருத்துவமனை, கோயம்புத்தூர். மையப் பொறுப்பு, CIMAR, கோயம்புத்தூர். இணைச்செயலாளர் – தமிழ்நாடு இந்திய கருவுறுதல் சங்கம். துணைத் தலைவர் – COGS.

•டாக்டர் பி. செந்தில்குமார் – மூத்த உதவிப் பேராசிரியர், நியோனாட்டாலஜி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை. தலைவர் – புதிதாகப் பிறந்த குழந்தை பிரிவு, ஹிந்துஸ்தான் மருத்துவமனைகள், கோவை. SNCU இன் TN – மேற்குக்கான பிராந்திய நோடல் அதிகாரி.

•டாக்டர் ஏ. ஜெயவர்தனா – பேராசிரியர் மற்றும் தலைவர் – பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர். நிர்வாகக்குழு உறுப்பினர், IAP, TNSC சாப்டர்

•டாக்டர் ஜெயஸ்ரீ என். – மகளிர் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர், இணைப் பேராசிரியர், கேன்சர் இன்ஸ்டிட்யூட் அடையாறு, சென்னை. EC உறுப்பினர், AOGIN இந்தியா (2024–2026), EC உறுப்பினர், AGOI பாண்டி, TN சாப்டர் (2024–2026)

கோயம்புத்தூரில் உள்ள மேசோனிக் மெடிக்கல் சென்டர் ஃபார் சில்ட்ரன் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஆலோசகர் & குழந்தை மருத்துவர், தேசிய IAP மாநாட்டின் பெடிகான் (2019) தலைவரான, டாக்டர் நந்தினி குமரன், அமர்வை நெறிப்படுத்தினார். விழிப்புணர்வுக்கான அவசரத் தேவை, இளம் பருவத்தினர் மற்றும் பெற்றோர்கள் இருவரையும் சென்றடைவதன் முக்கியத்துவம் மற்றும் தடுப்பு பராமரிப்புக்கு வழிகாட்டுவதில் சுகாதார வழங்குநர்களின் பங்கு ஆகியவற்றை அவர்கள் எடுத்துரைத்தனர்.

ஹெட்ச்.பி.வி (HPV), கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்தாது என்று பேச்சாளர்கள் விளக்கினர். இது ஆண்களையும் பெண்களையும் பாதிக்கும் பிறப்புறுப்பு, ஆசனவாய், ஆண்குறி மற்றும் தொண்டை புற்றுநோய்களுடனும் தொடர்புடையது. பெரும்பாலான ஹெட்ச்.பி.வி (HPV) தொற்றுகள் 15 முதல் 25 வயதுக்குள் ஏற்படுவதால், ஆரம்பகால விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் தடுப்பு மிகவும் முக்கியம். இப்போது குறைவான விலையில் ஹெட்ச்.பி.வி (HPV) தடுப்பூசி கிடைப்பதால், ஹெட்ச்.பி.வி (HPV) தொடர்பான புற்றுநோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது இன்னும் எளிதாகிவிட்டது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்தக்கூட்டங்கள் மூலம், Human Papillomavirus (HPV), கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. பராக் தேஷ்முக் கூறினார். “மருத்துவ நிபுணர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த தளம், திறந்த கலந்துரையாடல்களுக்கு அனுமதிக்கிறது மற்றும் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பிற்கான எளிய நடைமுறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.”

விழிப்புணர்வு, தகவலறிந்த தேர்வுகள் மற்றும் சமூக ஆதரவு மூலம் தடுக்கக்கூடிய புற்றுநோய்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்ற இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், பார்வையாளர்களுடனான திறந்த கலந்துரையாடலுடன் கோயம்புத்தூர் மாநாடு முடிந்தது. இந்தத் திட்டம் வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் தொடரும். இது, சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் தளங்களை வழங்கும்.

புனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ளது, மேலும் இந்தியாவிலும் உலக அளவிலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் நீண்டகால பங்களிப்பைக் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்த விலையில் உயர்தர தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. உலகளவில் உயிர்களைக் காப்பாற்றும் குறிக்கோளுடன், சீரம் நிறுவனம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கக்கூடிய, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் பாலின-நடுநிலை குவாட்ரிவலன்ட் HPV தடுப்பூசியான செர்வாவேக்-கை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.

●இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய காரணமாக கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் உள்ளது.

●கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கான ஆபத்தில் உள்ள பெண்களின் (வயது>=15) எண்ணிக்கை 511.4 மில்லியன் (51.4 கோடி)

●ஆண்டுதோறும் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை: 1,23,907

●ஆண்டுதோறும் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை: 77,348

மேலும் படிக்க