May 17, 2018
தண்டோரா குழு
கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-மஜத கட்சியினர் கூட்டணியான சேர்ந்து எங்களிடம் 115 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். அதைபோல் பாஜக 104தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே எங்களைதான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரிடம் கோரினார். இந்நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் – மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக ஆளுநர் முடிவின் எதிரொலியாக கோவா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக கூறப்படுகிறது.
கோவாவில் 2017 பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.பாஜக 13 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.