May 16, 2018
தண்டோரா குழு
கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதைடுத்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.அதைபோல், கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நாளை ஆட்சி அமைக்க எடியூரப்பா தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.