• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து :20 பேர் பலி

November 24, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் தனியார் பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் பகுதியில் உள்ள கால்வாய் மீது உள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் நிறுத்த முயற்சித்தும் அது முடியவில்லை.

இதை தொடர்ந்து பாலத்திலிருந்து பேருந்து ஆற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் பஸ் முழுவதுமாக நீரில் மூழ்கியது. பயணிகள் வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த இதில் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிகை உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க