• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார் – முதலமைச்சர் சித்தராமையா

March 8, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிமுகப்படுத்தினார்.

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. நீண்ட நாட்களாக தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. தேசியக் கொடி இருந்தாலும் எங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கோரி வந்தது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கென்று தனிகொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார்.இந்த கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கர்நாடக கொடியை உருவாக்க ஒரு குழுவை முதல்வர் சித்தராமையா உருவாக்கியிருந்தார். இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கொடி இந்திய கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது.   மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்மும் கொண்டதாக உள்ளது .அதைபோல் இந்த கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் நெருங்கும் நெரத்தில்  முதல்வர் சித்தராமையா இந்த கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது பாஜகவுக்கு செக் வைக்க சித்தராமையா முயலுகிறார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க