February 27, 2018
தண்டோரா குழு
கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின்,
தமிழகம் வந்த பிரதமர் மோடி,காவிரி பிரச்சனை பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்,உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில்,காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
மேலும்,ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிச்சயம் அமைக்க வேண்டும் என்றும் கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.