May 10, 2018
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் இறந்துவிட்டதால், அந்தத் தொகுதியில் மட்டும்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸூம், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதைபோல் அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ல் வாக்குப்பதிவும், மே 15ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.