May 18, 2018
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை நியமித்தார் ஆளுநர்.
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.அப்போது, எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்,மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை எடியூரப்பா எந்த கொள்கை முடிவையும் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,கர்நாடக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி.போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார்.இவர் மூன்று முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009 முதல் 2013ஆம் ஆண்டு வரை சபாநாயகராக இருந்தவர் கே.ஜி.போபையா, தற்போது விராஜ்பேட் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.