May 25, 2018
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு அரசியல் சூழலுக்கு பின்னர், மதசார்பற்ற ஜனதா தள தலைவரான குமாரசாமி,காங்கிரஸ் ஆதரவுடன், கர்நாடக முதலமைச்சராக கடந்த புதன்கிழமை பதவியேற்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தபோதிலும்,சட்டப்பேரவையில் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்காக குமாரசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது.
இதற்கிடையில்,சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அதைப்போல் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஆர். ரமேஷ் குமார் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
ஆனால்,பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இவர் ஏற்கெனவே 1994 – 1999-ம் ஆண்டுவரை சபாநாயகராக இருந்தவர் ஆவார்.
இதையடுத்து,அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த குமாரசாமி தனது தந்தை தேவ கவுடா முதல்வராக பணியாற்றியபோது சபாநாயகராக இருந்தவர் தான் முதல்வராக பணியாற்ற உள்ள போதும் சபாநாயகராக இருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.