May 19, 2018
தண்டோரா குழு
கா்நாடகா சட்டப் பேரவையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அனந்த் சிங்,பிரதாப் கௌடா பங்கேற்கவில்லை.
கா்நாடகாவில் வெற்றி பெற்ற 222 சட்டமன்ற உறுப்பினா்களும் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனா்.சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில்,காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினா்களான பிரதாப் கௌடா மற்றும் அனந்த் சிங் இருவரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மேலும்,நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்க கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.