• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக அரசு பஸ்ஸில் தீ, ஒருவர் பலி

February 21, 2017 தண்டோரா குழு

பெங்களூர் புறநகர் பகுதியில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து பேருந்து தீப்பிடித்ததில் 52 வயது பெண் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்தத் தீவிபத்து பெங்களூரு புறநகர்ப் பகுதியான நீலமங்களாவில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நேர்ந்திருக்கிறது.

“27 பேருடன் சிக்கமகளூருவிலிருந்து பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தீவிபத்தில் பலர் காயமடைந்தநர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதன் பின் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. உடனே பேருந்து ஓட்டுநருக்குத் தகவல் கொடுத்தோம். அவரும் சாலையில் ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்தோம். அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து வழக்கு பதிவாகியுள்ளது” என்றனர்.

“சம்பத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தடயவியல் சோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும்” என்று கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

“இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை செய்யப்படும். இதற்குக் காரணமானோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் இறந்தவருடைய உறவினருக்கு நஷ்ட ஈடாக 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுடைய மருத்துவச் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் படிக்க