April 9, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் ரஜினி, கமலின் திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக எல்லையான அத்திபள்ளியில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஏப்ரல் 12ம் தேதி கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது காவிரி வாரியம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே கர்நாடகாவில் ஏப்.,12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுகிறது. ஸ்டிரைக் குறித்து மே 3ல் நடக்கும் காவிரி வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். கர்நாடகாவில் ரஜினி, கமலின் திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.