• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் – அமித்ஷா

May 21, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

கர்நாடகவில் நடந்து முடித்த சட்டபேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. யாருக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆளுநர் அழைப்பின் பேரில் ஆட்சியமைத்த பாஜக பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில்,கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும், கர்நாடகாவில் நடந்த அரசியல் பரபரப்புக்களின் போதும் எந்த வித கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, இன்று மவுனம் கலைத்துள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கர்நாடகாவில் பாஜக.வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி; ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தற்போது மக்களிடம் பா.ஜ.,வின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பா.ஜ., தான் தனிப்பெரும் கட்சி. ஆட்சி அமைக்கும் உரிமை பா.ஜ.,வுக்கு தான் உண்டு. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்., ஆட்சி அமைக்க உள்ளது மக்களை ஏமாற்றும் செயல். காங்., அமைச்சர்கள் தேர்தலில் தோற்றுவிட்டனர். இந்த தோல்வியை காங்., ஏன் கொண்டாடுகிறது? எதை கொண்டாடுகிறது என்றே தெரியவில்லை.
10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியடைந்தும், முதலமைச்சரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் காங்கிரஸ் எதை கொண்டாடுகிறது. 38 தொகுதிகளில் மட்டுமே வென்ற மஜத.,வும் கொண்டாட என்ன இருக்கிறது. கர்நாடக தேர்தலில் பா.ஜ., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்,மேலும். யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க