• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் பாகுபலி 2 திரையிட கூடாது கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு

March 25, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில்பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015ம் வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ராஜமவுலி இயக்கியுள்ளார்.2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2′ இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

பாகுபலி’ படத்தின் இருபாகத்திலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நாம் அறிந்ததே. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு அதன் அடுத்த பாகமான “பாகுபலி 2”-ல் தான் விடை இருக்கிறது.

இந்நிலையில், படத்தில் சத்யராஜ் நடித்திருக்கும் ஒரே காரணத்தால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எதிர்ப்புக் குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான தண்ணீர் பிரச்சனையின் போது, நடிகர் சத்யராஜ் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதால், சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை படத்தை கர்நாடகாவில் படத்தை திரையிட கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி கர்நாடக திரைப்படக் குழுவின் தலைவர் கோவிந்துவை சந்தித்த அவர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

“பாகுபலி” படத்தின் முதல் பாகத்திற்கு தடை விதிக்க கோராத அவர்கள், அதன் அடுத்த பாகமான ” “பாகுபலி 2” படத்திற்கு தடை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க