May 19, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநயாகர் போபையா நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகாவின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது,போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.