May 28, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் துளசிகெரி பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார்.
கர்நாடகாவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இத்தேர்தலில் ஜம்காந்தி ( Jamkhandi) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரான குல்கர்னி ஸ்ரீகாந்தைவிட 2975 அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் சித்துநைமா கவுடா. இந்நிலையில் இவர் கோவாவில் இருந்து பாகல்கோட்டிற்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது துளசிகெரி என்னும் பகுதியில் இவரது கார் விபத்தில் சிக்கியது.ல்இதில் எம்எல்ஏ சித்துநைமா கவுடா பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது சித்துநைமா கவுடா மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.