May 29, 2018
தண்டோரா குழு
பெங்களூருவில் அரசு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வழங்குமாறு தனியார் பள்ளி ஒன்றுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணயைம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் “தஃபோபில்ஸ்” எனும் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் படிக்காத மாணவர்களை உச்சி வெயிலில் நிற்க வைப்பதகவும் குறிப்பிட்ட சில பிராண்ட் ஷூக்களை மட்டுமே போட்டு வர கட்டாயப்படுதுவதாகவும் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் என 13 விதமான புகார்களை பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக அளித்தனர்.
இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட தனியார் பள்ளிக்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அபராதமாக பெங்களுருவில் உள்ள ஐந்து அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் 5 கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.