• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகவில் ரஜினி உருவபொம்மை எரிப்பு

February 17, 2018 தண்டோரா குழு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக  ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிராக கர்நாடாகவில் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை  தெரிவித்தனர். இதற்கிடையில், காவிரி வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா என்ற இடத்தில் கன்னட அமைப்பினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

 

 

மேலும் படிக்க