• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக விற்க தொழிற்சாலை அமைத்து தர விவாயிகள் கோரிக்கை

January 25, 2021 தண்டோரா குழு

கோவை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கருவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய கருவேப்பிலை தொழிற்சாலை அமைத்து தர கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் , காரமடை சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் 2500 ஏக்கரில் பிரதான விவசாயமாக கருவேப்பிலை உள்ளது.இப்பகுதியில் விளையும் செங்காம்பு கருவேப்பிலை வாசனையும் சுவையும் மிகுந்தது. கருவேப்பிலை 4 கால இடைவெளயில் விவசாயம் செய்யப்பட்டு அறுவடை செய்யபட்டு வருகிறது.

கேரளா ,கர்நாடகா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் மேட்டுப்பாளையம், காரமடை, பெள்ளாதி போன்ற பகுதிகளில் இருந்து கருவேப்பிலைகள் அனுப்பட்டுவருகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயங்களுக்கு அடுத்தப்படியாக பெரிய விவசாய பயிராக கருவேப்பிலை உள்ளது.

கருப்வேப்பில்லையை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய இப்பகுதியில் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இது குறித்து காரமடை விவசாயிகள் கூறுகையில்,

“ஆண்டிற்கு நான்கு பருவகாலங்களில் கருவேப்பிலை அறுவடை செய்யப்படும் ஆனால் ஒரு முறை மட்டுமே விவசாயிகளுக்கு லாபமான விலை கிடைக்கிறது. அதுவும் பணிக்காலங்களில் மட்டும் தான். காரணம் செடிகள் வளராத காரணத்தால் அதன் அடர்த்தி மிகக்குறைவாக இருப்பதால் அந்த நேரத்தில் மட்டும் விலை அதிகமாகும். ,ஆனால் அதன் உற்பத்தி மிகவும் குறைவான அளவில் மட்டுமே இருக்கும். விவசாயிகளுக்கு இந்த விலையினால் பெரிய பலன் இருக்காது. கிலோ ஒன்றுக்கு மற்ற காலங்களில் ரூபாய் 10 முதல் 20 வரை கிடைக்கும். தற்போது ரூபாய் 30 முதல் 40 வரை கிடைக்கும். ஆனால் மற்ற காலங்களில் ஏக்கருக்கு 5 டன் விளைச்சல் கிடைக்கும் தற்போது 2 டன் மட்டுமே கிடைக்கும். நோய் தாக்கம் போன்ற நேரங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது, மனம் வறுந்தும் விவசாயிகள் பயிரை பிடுங்கி வீசவேண்டிய நிலையும் ஏற்படும்.இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்த கருவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற கருவேப்பிலை தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க வேண்டும்,’’என்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளைய விவசாயிகள் கூறுகையில், “

மேட்டுப்பாளையத்தில் கருவேப்பிலை தொழிற்சாலை அமைக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் வாக்குறுதி அளிக்கபட்டது, ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. இதனை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி தந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கருவேப்பிலையில் இருந்து எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கருவேப்பிலை விவசாயத்தை நம்பி மட்டுமே இப்பகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் சென்னை, ஈரோடு போன்ற பிற மாவட்டங்களுக்கும் இங்குள்ள கருவேப்பிலைகள் தான் செல்கிறது,” என்றார்.

மேலும் படிக்க