October 29, 2020
தண்டோரா குழு
உக்கடம் முதல் கரும்புகடை வரை மேம்பாலத்தின் கீழ் இன்றிலிருந்து நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உக்கடத்திலிருந்து கரும்புக்கடை வரை கடந்த இரு வருடங்களாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த இரு வருடங்களாக உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை, ஆத்துப்பாலம் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்துகள் ஆகியவை புட்டுவிக்கி பாலம் வழியாக சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் தற்பொழுது மேம்பால பணிகள் பெருமளவு முடிந்துள்ள நிலையில் மேம்பாலத்தின் கீழ் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உக்கடத்திலிருந்து கரும்புக்கடை வரை செல்வதற்காக ஒரு பாதை போடப்பட்டு நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் மட்டும் செல்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் செல்லும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் கரும்புக்கடை வழியாக உக்கடம் வரும் வாகன ஓட்டிகள் பலரும் உக்கடம் குளத்தை ஒட்டி போடப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தாமல் இதே சாலையை பயன்படுத்துவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.