• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமுட்டை விற்பனை தொடர்பாக கோவை சிறையில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

July 5, 2022 தண்டோரா குழு

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து கருமுட்டை கொடுக்க வைத்து கொடுமைபடுத்துவதாக கூறி புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர் மற்றும் பெண் புரோக்கர் மாலதி(36) ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர்.பின்னர் பெற்ற மகளையே பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டை விற்க வைத்த தாய், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் ஆண் நண்பர் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை சிறையிலும் தாயின் ஆண் நண்பர் கோபி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று கோவை சிறையில் தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமியின் தாய் மற்றும் புரோக்கர் மாலதியிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியிடம் இருந்து எவ்வுளவு முறை கருமுட்டை எடுக்கப்பட்டது. எந்த தனியார் மருத்துவமனை வழங்கப்பட்டது போன்ற முக்கியமான தகவல்கள் பெறப்பட்டது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க