• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல் நிலைய பகுதிகளில் புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

January 1, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன்,இன்று (31.12.2024) கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்தார்.

கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதி மற்றும் சூலூர் சிந்தாமணிபுதூர் சந்திப்புகளில் நடக்கக்கூடிய குற்றங்களை தடுப்பதற்காகவும்,போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் புறக்காவல் சாவடி (Police Outpost)அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்விழாவில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேல்,கருமத்தம்பட்டி உதவி ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும்,காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க