கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது இதனையடுத்து சோமனூர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது டாஸ்மாக் கடையை ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் பாஜக அதிமுக கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் சோமனூர் சாலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்போதைக்கு டாஸ்மாக் கடை மாற்றப்படாது என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்