May 20, 2021
தண்டோரா குழு
கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
‘தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.கருப்பு பூஞ்சை பல ஆண்டுகளாக இருக்க கூட ஒரு பாதிப்புதான். கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் தேவையின்றி பீதியடைய கூடாது.
கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது. ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி, ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை
ஏற்படலாம்.கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய்.யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான் என்றார்.